Bible Versions
Bible Books

2 Kings 17:27 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
IRVTA   அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
ERVTA   அதற்கு அசீரியாவின் அரசன், "நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்" என்றான்.
RCTA   அதற்கு அசீரிய அரசன், "நீங்கள் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த குருக்களில் ஒருவனைச் சமாரியாவுக்குக் கூட்டிப் போங்கள். அவன் அங்கே வந்து அவர்களுடன் தங்கியிருந்து, நம் மக்களுக்கு அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளைக் கற்பிக்கட்டும்" என்று கட்டளையிட்டான்.
ECTA   எனவே, அசீரியா மன்னன், "நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்" என்று கட்டளையிட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us