Bible Versions
Bible Books

Acts 21:40 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப்பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்:
IRVTA   அவன் அனுமதி அளித்தபோது, பவுல் படிகளின்மேல் நின்று மக்களைப் பார்த்து அமைதியாக இருக்கச்சொல்லி கையை அசைத்தான்; மிகுந்த அமைதி உண்டானது; அப்பொழுது அவன் எபிரெய மொழியிலே பேசத்தொடங்கினான். PE
ERVTA   பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.
RCTA   படைத்தலைவன் விடைதந்தபின், சின்னப்பர் படிகளின்மேல் நின்றுகொண்டு, அமைதியாக இருக்கும்படி மக்களை நோக்கிச் சைகை காட்டினார். ஆழ்ந்த அமைதி உண்டாகவே, சின்னப்பர் எபிரேய மொழியில் பேசத் தொடங்கினார்.
ECTA   பவுல் அனுமதி பெற்றுப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு மக்களை நோக்கிக் கையால் சைகை காட்டினார். மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் பவுல் எபிரேய மொழியில் உரையாற்றத் தொடங்கினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us