Versions
TOV கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
IRVTA யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய இறக்கைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவர்ணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
ERVTA அவர்களிடம் சொல்: ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) பெருஞ் சிறகுகளுடன் லீபனோனுக்கு வந்தது. அக்கழுகு புள்ளிகளைக்கொண்ட இறகுகளை கொண்டிருந்தது.
RCTA ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும், பல வண்ணத் தூவிகளையும் பெரும் உடலையும் கொண்ட பெரிய கழுகு ஒன்று பறந்து வந்தது; அது லீபானுக்கு வந்து ஒரு கேதுரு மரத்தின் நுனிக் கிளையைப் பிடித்தது;
ECTA நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.