Versions
TOV அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக்கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
IRVTA அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
ERVTA அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும். மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள். நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும். ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும். இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!
RCTA அது உள்ளங்களைக் கலங்கச் செய்யும், ஒவ்வொரு வாயிலிலும் பலரை அழித்துப் போடும், அது வெட்டுவதற்காகத் தீட்டப்பட்டது, மின்னும்படி துலக்கப்பட்டது, கொல்லும்படி கூராக்கப்பட்டது.
ECTA அது இதயங்களைக் கலங்கச் செய்யும்; நான் வைத்துள்ள அவ்வாள் ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும். ஆம், அது மின்னுவதற்காகக் செய்யப்பட்டது; கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.