Bible Versions
Bible Books

Ezekiel 30:11 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
IRVTA   இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
ERVTA   நேபுகாத்நேச்சாரும் அவனது ஜனங்களும் நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள். நான் எகிப்தை அழிக்க அவர்களைக் கொண்டுவருவேன். அவர்கள் தம் வாள்களை எகிப்திற்கு எதிராக உருவுவார்கள். அவர்கள் அத்தேசத்தை மரித்த உடல்களால் நிரப்புவார்கள்.
RCTA   வேற்றினத்தாரில் மிகக் கொடுமையான அவனையும் அவன் சேனைகளையும் கொண்டு வந்து, எகிப்து நாட்டை அழிக்கச் செய்வோம்; அவர்கள் தங்கள் வாளை உருவி, எகிப்தியர் மேல் பாய்ந்து கொன்று, கொலையுண்ட உடல்களால் நாட்டை நிரப்புவார்கள்.
ECTA   மக்களினங்களில் மிகவும் வலிமை அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்; எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us