Versions
TOV அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும்.
IRVTA அர்ப்பணிக்கப்பட்ட நிலம் அனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், இருபத்தைந்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; பட்டணத்தின் நிலம் உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலம் சதுரமாக இருக்கவேண்டும்.
ERVTA ‘இத்தனிச் சிறப்புகுரிய பகுதி சதுரமாக இருக்கும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 25,000 முழம் (8.3 மைல்) அகலமும் உடையது. இதன் ஒரு பகுதி ஆசாரியர்களுக்கும் இன்னொரு பகுதி லேவியர்களுக்கும் உரியதாகும். ஒரு பகுதி நகரத்திற்குரியது.
RCTA மானிய நிலமனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும் இருபத்தையாயிரம் கோல் அகலமுமாய் இருக்க வேண்டும்; அதிலே பரிசுத்த இடத்தின் பங்கும், நகரத்துக்குரிய பங்கும், இவ்விரு பங்குகளாகப் பிரிக்கப்படும்.
ECTA முழு நிலப்பகுதியும் இருபத்தையாயிரம் கோல் நீள அகலமுடைய சதுர நிலமாய் இருக்கும். தூயகத்திற்கும் நகருக்குமான பகுதிகளை ஒதுக்கி வைப்பீர்களாக!