Versions
TOV நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
IRVTA நீங்கள் மனந்திரும்பி என்னில் அமர்ந்திருந்தால் காப்பாற்றப்படுவீர்கள்; அமைதியும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்கிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதில்லாமல்;
ERVTA இஸ்ரவேலில் பரிசுத்தராயிருக்கிற, கர்த்தராகிய எனது ஆண்டவர் சொல்கிறார், "என்னிடம் நீங்கள் திரும்பி வந்தால் பாதுகாக்கப்படுவீர்கள். என்னை நம்பினால் அது உங்களுக்கு வரப்போகிற உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்" என்கிறார். ஆனால் நீங்கள் அவற்றைச் செய்ய விரும்பவில்லை.
RCTA ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தரும் கடவுளுமான ஆண்டவர் கூறுகிறார்: "நீங்கள் திரும்பி வந்து அமைதியாய் இருந்தால் மீட்கப்படுவீர்கள்; அமரிக்கையிலும் நம்பிக்கையிலும் உங்கள் வலிமை இருக்கும்." ஆனால் உங்களுக்கு மனமில்லாமற் போயிற்று.
ECTA என் தலைவரும் இஸ்ரயேலின் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்; அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்; நீங்களோ ஏற்க மறுத்தீர்கள்.