Versions
TOV யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
IRVTA யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
ERVTA விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே. எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்! நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்". கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார். இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்) உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
RCTA புழுவுக்கு நிகரான யாக்கோபே, அற்பமான இஸ்ராயேலே, அஞ்சவேண்டா; நாமே உனக்குத் துணை நிற்போம், என்கிறார் ஆண்டவர், இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர்.
ECTA "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், "என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.