Bible Versions
Bible Books

Job 31:35 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
IRVTA   ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்;
இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும்,
என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
ERVTA   "ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்! நான் எனது நியாயத்தை விளக்கட்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன். நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதிவைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
RCTA   ஐயோ! என் வழக்கை யாரேனும் கேட்கும் வரம் எனக்குக் கிடைக்காதா? இதோ இருக்கிறது என் கையொப்பம், எல்லாம் வல்லவர் எனக்கு மறுமொழி கூறட்டும்! என் எதிராளி எனக்கெதிராய்க் கொண்டுள்ள வழக்கை எழுதி என் கையில் கொடுத்தால் நலமாயிருக்குமே!
ECTA   என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால் எத்துணை நன்று! இதோ! என் கையொப்பம்; எல்லாம் வல்லவர் எனக்குப் பதில் அளிக்கட்டும்! என் எதிராளி வழக்கை எழுதட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us