Versions
TOV அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
IRVTA அவர்கள் எபூசுக்கு அருகே வரும்போது, இரவு நேரமானது; அப்பொழுது வேலைக்காரன் தன்னுடைய எஜமானை நோக்கி: எபூசியர்கள் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இரவு தங்கலாம் என்றான்.
ERVTA பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, "இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்" என்றான்.
RCTA அவர்கள் எபுசுக்கு அருகில் வரும் போது இரவானது. எனவே, ஊழியன் தன் தலைவனை நோக்கி, "எபுசேயர் நகருக்குப் போய் அங்கு இரவைக் கழிக்கலாம்; தயவு செய்து வாரும்" என்றான்.
ECTA அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், "நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்" என்றான்.