Bible Versions
Bible Books

Nehemiah 9:6 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.
IRVTA   நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.
ERVTA   நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
RCTA   ஆண்டவரே, நீர் ஒருவரே விண்ணையும் வானாதி வானங்களையும், வானக அணிகளையும் படைத்தவர்! மண்ணையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடல்களையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கியவர்; அவற்றிற்கெல்லாம் உயிர் அளிப்பவர். வானக அணிகள் உம்மைப் பணிகின்றன.
ECTA   நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us