Bible Versions
Bible Books

Numbers 20:12 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
IRVTA   பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார்.
ERVTA   ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், "அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக் கொண்டு செல்லமாட்டீர்கள்!" என்றார்.
RCTA   பின்பு ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் நம்மை நம்பாமலும் இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு முன்பாக நம் புனிதத் தன்மையைப் பேணாமலும் நடந்தீர்களாதலால், நாம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.
ECTA   ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், "இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us