Versions
TOV நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
IRVTA {அடைக்கலப்பட்டணம்} PS நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்திற்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கவேண்டும்; அவைகளையல்லாமல், 42 பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
ERVTA இத்தகைய ஆறு நகரங்களும் பாதுகாப்பின் நகரங்களாகும். விபத்தாக எவராவது ஒருவரைக் கொன்றுவிட்டால், உடனே அவன் இந்த நகரத்திற்குள் ஓடிப்போனால் இது அவர்களுக்குப் பாதுகாப்பைத்தரும். இந்த ஆறு நகரங்களோடும் மேலும் 42 நகரங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும்.
RCTA நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் நகரங்களில், கொலைசெய்தவன் ஓடி ஒழியத்தக்க ஆறு நகரங்களை அடைக்கல நகரங்கள் என்று குறிக்கக்கடவீர்கள். இந்த ஆறும் தவிர வேறு நாற்பத்திரண்டு நகரங்கள் லேவியருக்கு உரியவைகளாய் இருக்கவேண்டும்.
ECTA நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டிய நகர்களாவன; கொலையாளி தப்பியோடித் தஞ்சம் புகும் அடைக்கல நகர்கள் ஆறு; அவை தவிர நாற்பத்திரண்டு நகர்கள்.