Versions
TOV தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
IRVTA தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
ERVTA கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
RCTA பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது; ஆண்டவராகிய கடவுளே கதிரோனும் கேடயமுமாய் உள்ளார்: அருளும் மாட்சியும் தருபவர் ஆண்டவரே; மாசின்றி நடப்போர்க்கு எந்த நலனையும் மறுக்கமாட்டார்.
ECTA ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.