Versions
TOV அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
IRVTA அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
ERVTA ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், "உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும். ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது!
RCTA அதற்கு அவனோடு இன்ப சுகமாக வளர்ந்து வந்திருந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, "உம்மைப் பார்த்து, 'உம் தந்தை என் நுகத்தை அதிகப் பளுவாக்கியுள்ளார்; நீர் அதை இலகுவாக்க வேண்டும்' என்று கேட்கும் மக்களுக்கு நீர் கூறவேண்டிய மறுமொழியாவது: 'என் தந்தையின் இருப்பை விட என் சுண்டு விரலே பெரிது.
ECTA அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், "'உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்' என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்; என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது;