Versions
TOV அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
IRVTA அவன் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடு அப்படி செய்யவில்லை.
ERVTA கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை.
RCTA அமாசியாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான். ஆயினும் முழுமனத்தோடும் அவ்வாறு நடந்தானில்லை.
ECTA ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதையே அவன் செய்தான்; இருப்பினும், முழு மனத்துடன் அவ்வாறு செய்யவில்லை.