Bible Versions
Bible Books

2 Corinthians 1:8 (KJV) King James Version

Versions

TOV   ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
IRVTA   எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.
ERVTA   சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம்.
RCTA   ஏனெனில், சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு நேர்ந்த வேதனை உங்களுக்குத் தெரியுமன்றோ? அது எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டியது; எங்களால் தாங்கமுடியாத சுமையாயிற்று; இனி பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமற் போயிற்று; இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறோம்.
ECTA   சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின; எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us