Bible Versions
Bible Books

Deuteronomy 26:5 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.
IRVTA   அப்பொழுது நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நின்று அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்; அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப் போய், அவ்விடத்தில் அந்நியனாகக் குடியிருந்து, அங்கே பெரிய பலத்த எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான்.
ERVTA   பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர்.
RCTA   நீயோ உன் ஆண்டவருடைய முன்னிலையில் வாய்விட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: சீரிய நாட்டினன் ஒருவன் என் தந்தையைத் துன்புறுத்தியதினால் அவர் கொஞ்ச மக்களோடு எகிப்துக்குப் போய், அங்கே பெரிய பலத்த கணக்கிட முடியாத இனமானார்.
ECTA   நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது; "நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us