Versions
TOV ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
IRVTA ஏசாவையோ நான் வெறுத்தேன் * தள்ளிவிட்டேன் ; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய பங்கை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் இருப்பிடமாக்கினேன்.
ERVTA நான் ஏசாவை ஏற்றுக்கொள்ளவில்லை, நான் ஏசாவின் மலை நாட்டை அழித்தேன். ஏசாவின் நாடு அழிக்கப்பட்டது. இப்பொழுது அங்கே காட்டு நாய்கள் மட்டுமே வாழ்கின்றன" என்றார்.
RCTA ஏசாவின் மீது நாம் அன்பு கொள்ளவில்லை. அவனது மலைநாட்டைப் பாழாக்கினோம்; அவனது உரிமைச் சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளுக்கு விட்டுவிட்டோம்" என்கிறார் ஆண்டவர்.
ECTA ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன்" என்கிறார் ஆண்டவர். "நாங்கள் அழிக்கப்பட்டோம்; ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.