Versions
TOV அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப்போகும்.
IRVTA அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும். PS
ERVTA அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும். அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும். நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன். ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள். எனவே அவை எனக்கு விசுவாசம் அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.
RCTA அதன் படிமங்கள் யாவும் துகள் துகளாக்கப்படும், வருமானங்கள் எல்லாம் நெருப்பினால் எரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் நாம் நொறுக்கிப் போடுவோம். ஏனெனில் விலைமகளுக்குரிய பணயமாய் அவை சேர்க்கப்பட்டவை, விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
ECTA அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்; அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்; ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன; விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.