Versions
TOV அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
IRVTA அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
ERVTA சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
RCTA அவன் புறப்படுவதற்குள் கார் முகில் சூழ, வானம் இருண்டது; காற்றும் அடித்தது. உடனே பெருமழை பெய்தது. ஆக்காப் தேரில் ஏறி ஜெஸ்ராயேலுக்குச் சென்றான்.
ECTA இதற்கிடையில் வானம் இருண்டது; கார் மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான்.