Bible Versions
Bible Books

1 Kings 22:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.
IRVTA   இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான்.
ERVTA   ஆகாப் யோசபாத்திடம், "நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் அரசன் என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்" என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான்.
RCTA   இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நீர் உம் அரச ஆடைகளை அணிந்து, ஆயுதம் தாங்கிப் போரிடும்" என்று சொன்னான். இஸ்ராயேலின் அரசனோ மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.
ECTA   இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால் நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்; என்று சொன்னான். அவ்வாறே இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us