Bible Versions
Bible Books

Amos 6:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப்போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.
IRVTA   நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.
ERVTA   கல்னேவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து ஆமாத் என்னும் பெருநகருக்குப் போங்கள். பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். நீங்கள் இந்த இராஜ்யங்களை விடச் சிறந்தவர்களா? இல்லை. அவர்கள் நாடுகள் உங்கள் நாட்டைவிட பெரியவையா?
RCTA   காலானே என்னுமிடத்திற்குப் போய்ப் பாருங்கள், அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஏமாத்துக்குப் போங்கள், பிறகு பிலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள். அந்த அரசுகளை விட நீங்கள் சிறந்தவர்களோ? உங்கள் நாட்டை விடப் பரப்பளவில் அவர்களுடைய நாடு பெரியதோ?
ECTA   கல்னேக்குப் போய்ப் பாருங்கள்; அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்; பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்; அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us