Bible Versions
Bible Books

Isaiah 18:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
IRVTA   கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.
ERVTA   அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது. விரைவாகச் செல்லும் தூதர்களே! வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள். (எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள். அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள். அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது. ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்).
RCTA   அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் கடந்து தூதுவரை அனுப்புகின்றது! விரைந்தோடும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்த, வலிமை மிக்க மக்களைக் கொண்டதும், அருகிலும் தொலைவிலும் அச்சம் விளைக்கும் மக்களுள்ளதும், படைப்பலத்தால் பல நாடுகள் மேல் வெற்றி கொண்டதும், ஆறுகளால் பிரிக்கப்படுவதுமான அந்த நாட்டுக்கு விரைந்து செல்லுங்கள்.
ECTA   அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது; விரைவாய்ச் செல்லும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்; அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்; ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்; ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us