Versions
TOV வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
IRVTA வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும்.
ERVTA வானங்கள் புத்தகச் சுருளைப்போலச் சுருட்டப்படும். நட்சத்திரங்கள் திராட்சைக் கொடியின் இலைகள் அல்லது அத்திமர இலைகள்போல உதிரும். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் உருகிப்போகும்.
RCTA வானத்தின் படைகள் யாவும் சோர்வடையும், வான்வெளி ஏட்டுச் சுருள் போல் சுருட்டப்படும்; திராட்சைச் செடியின் இலைகளும் அத்திமரத்தின் இலைகளும் உதிர்வது போல வான் படைகள் யாவும் வீழும்.
ECTA விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்; திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.