Bible Versions
Bible Books

Acts 26:26 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.
IRVTA   இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல.
ERVTA   அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப் பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே.
RCTA   மேற்சொன்னதை அரசரும் அறிவார். எனவே, அவருக்கு முன்பாகத் துணிவுடன் பேசுகிறேன். இதில் எதையாவது அவர் அறியாமல் இருப்பாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் ஒரு மூலையில் நடந்ததன்று.
ECTA   அரசர் இவற்றை அறிவார். ஆகவே நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன். இவற்றில் எதுவும் அவரது கவனத்தில் படாமல் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் இவை ஏதோ ஒரு மூலையில் நடந்தவையல்ல.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us