Bible Versions
Bible Books

Esther 3:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
IRVTA   ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருட ஆட்சியின் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு (யூதர்களை அழிக்கும் திட்டத்திற்கா) எந்த நாள் எந்த மாதம் என்று அறியப் போடப்பட்டது, ஆதார் (ஏப்ரல்) மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது.
ERVTA   அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் ‘பூர்’ என்று அழைக்கப்பட்டது).
RCTA   அசுவேருசுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் நீசான் எனப்படும் முதல் மாதத்தில், யூத குலத்தினரை அழிக்க வேண்டிய மாதமும் தேதியும் யாதென அறியும் பொருட்டு, ஆமான் முன்னிலையில், எபிரேய மொழியில் 'பூர்' எனப்படும் கலசத்தில் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அச்சீட்டிலே 'ஆதார்' எனும் பன்னிரண்டாம் மாதம் விழுந்தது.
ECTA   அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் 'பூர்' என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us