Bible Versions
Bible Books

Genesis 19:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
IRVTA   அதற்கு அவர்கள்: “அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம்” என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள்.
ERVTA   வீட்டைச் சுற்றி நின்றவர்கள், "எங்கள் வழியில் குறுக்கிடாதே" என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, "லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்" என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், "நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்" என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.
RCTA   அதற்கு அவர்கள்: நீ அப்பாலே போ என்றனர். மீண்டும் அவனை நோக்கி: இவ்விடத்திற்கு அந்நியனாய் வந்த நீ எங்களுக்கு நியாயம் கூறத் துணிந்ததென்ன? பொறு; அவர்களுக்குச் செய்வதை விட உனக்கு அதிகத் தீங்கு இழைப்போம் என்று சொல்லி, லோத்தைக் கொடுமையாய் நெருக்கிக் கதவை உடைக்க முயலுகையில்,
ECTA   அதற்கு அவர்களோ, "அப்பாலே போ" என்றனர். மேலும் அவர்கள் "அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?" என்று சொல்லிக்கொண்டு, "அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்" என்றனர். பிறகு லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us