Bible Versions
Bible Books

Hosea 13:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இவன் சகோதரருக்குள்ளே ஜனம் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.
IRVTA   இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
ERVTA   இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான். ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும். கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும். பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும். அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும். இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும் காற்று அடித்துக்கொண்டு போகும்.
RCTA   எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம்.
ECTA   எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்; ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக்காற்று பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்; வந்து அவனுடைய நீரோடைகளையும், நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும். அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us