Versions
TOV இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
IRVTA இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.
ERVTA இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!" என்றான்.
RCTA நீர் நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். எனவே நான் இம்மக்களை நன்கு நடத்திச் செல்லவேண்டிய ஞானத்தையும் அறிவையும் அடியேனுக்குத் தாரும். ஏனெனில் ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களுக்குத் தகுந்த விதமாய் நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.
ECTA எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.