Bible Versions
Bible Books

2 Samuel 19:35 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்வேண்டியது என்ன?
IRVTA   இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
ERVTA   எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்?
RCTA   இன்று எனக்கு வயதோ எண்பது, இனிப்பையும் கசப்பையும் வேறுபடுத்த என் புலன்கள் செயலற்று விட்டன. உண்பதும் குடிப்பதும் உம் அடியானுக்குச் சுவைக்குமா? பாடகர் பாடகிகளின் குரல் இனி எனக்குக் கேட்குமா? அடிமையாகிய நான் அரசராகிய என் தலைவருக்கு பாரமாய் இருக்க வேண்டியது ஏன்?
ECTA   இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது; நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் படகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் முடியுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us