Bible Versions
Bible Books

Ecclesiastes 12:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
IRVTA   * எபிரேய வார்த்தை இதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கிறது. இது சுடு காட்டில் நடக்கிற காரியத்தை குறிக்கலாம், மரணத்தில் சரீர செயல்கள் ஓய்ந்து போய்விடுகிறது எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும்,
ERVTA   உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.
RCTA   இயந்திரக்கல் சுழலும் ஒலி மெலிந்துபோக, தெரு வாயிற் கதவுகள் அடைபட்டு, பறவைகள் கூவ, மனிதர் எழுந்து, இசைக்கருவி இயக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழக்குமுன்னும்;
ECTA   தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us