Versions
TOV உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
IRVTA உன்னுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, அநேக பெண்களின் கண்களுக்கு முன்பாக உனக்கு நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன்னுடைய வேசித்தனத்தை ஒழியச்செய்வேன்; நீ இனிக் கட்டணம் கொடுப்பதில்லை.
ERVTA அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன்.
RCTA கடைசியில் அவர்கள் உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, பெண்கள் பலர் முன்னால் உன்னைக் கொடுமையாய்த் தண்டிப்பார்கள்; அதன் பின் உன் வேசித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம்; யாருக்கும் இனி நன்கொடை கொடுக்கமாட்டாய்.
ECTA அத்தோடு, உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பர். பெண்கள் பலர் முன்னிலையில் உனக்குரிய தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவர். நானும் உன் வேசித்தனத்துக்கு முடிவுகட்டுவேன். நீ இனி யாருக்கும் அன்பளிப்பு அளிக்க மாட்டாய்.