Bible Versions
Bible Books

Ezekiel 34:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
IRVTA   நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள்.
ERVTA   நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்!
RCTA   வலிமையற்ற ஆடுகளை நீங்கள் தேறும்படி செய்யவில்லை; பிணியுற்றவற்றை நீஙக்ள் பராமரிக்கவில்லை; எலும்பு முறிந்தவற்றுக்குக் கட்டுப்போடவில்லை; வழிதவறியவற்றைத் திரும்பக் கொண்டுவரவில்லை; காணாமற்போனவற்றைத் தேடவில்லை; ஆனால் அவற்றைக் கண்டிப்புடணும் கடுமையாகவும் நடத்தினீர்கள்.
ECTA   நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us