Bible Versions
Bible Books

Genesis 50:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
IRVTA   என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.
ERVTA   ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரைக் கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக் கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’" என்றான்.
RCTA   என் தந்தை எனக்கு ஆணையிட்டு: இதோ, நான் சாகப் போகிறேன் கானான் நாட்டில் நான் எனக்காக வெட்டி தயார் செய்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்வாய் என்று சொன்னார் ஆகையால், நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவர விழைகிறேன் என்றார்.
ECTA   தந்தை, "நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய்" என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us