Versions
TOV கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன்.
IRVTA {துதியும் ஜெபமும்} PS யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.
ERVTA கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன். கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன். கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார். கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார்.
RCTA ஆண்டவரின் இரக்கச் செயல்களை நினைவு கூர்வேன்; ஆண்டவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், இஸ்ராயேல் வீட்டாருக்குத் தம் கருணைக்கேற்றவாறும், வற்றா இரக்கப் பெருக்கத்திற்கேற்றவாறும் செய்த நன்மைகளுக்காகவும், ஆண்டவருக்கு புகழ் கூறுவேன்.
ECTA ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.