Bible Versions
Bible Books

Jeremiah 51:46 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
IRVTA   உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருடத்தில் ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருடத்தில் வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்தில் கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
ERVTA   "எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம். வதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்! இந்த ஆண்டு ஒரு வதந்தி வரும். அடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும். நாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும். ஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
RCTA   உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும், நாட்டில் உலவும் வதந்தியைக் கேட்டு அஞ்சாதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும், அடுத்த ஆண்டில் இன்னொரு வதந்தி உலவும்: நாட்டில் அக்கிரமம் மலிந்திருக்கும், ஓர் ஆளுநனுக்கு எதிராய் இன்னொரு ஆளுநன் வருவான்.
ECTA   உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்; கலங்காதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்; மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்; நாட்டில் வன்முறை மலியும்; ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us