Versions
TOV அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
IRVTA கடுமையான இருளும்
மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி,
மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
ERVTA மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன்.
RCTA இருட்டும் காரிருளும் அந்நாளைக் கவ்வி கொள்வதாக! கார் மேகங்கள் அதன் மேல் கவிந்து கொள்க! இருள் சூழச் செய்யும் அனைத்தும் அதை அச்சுறுத்துக!
ECTA காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக்கொள்ளட்டும்; கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்; பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும்.