Bible Versions
Bible Books

Joshua 22:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
IRVTA   உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
ERVTA   "உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.
RCTA   உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ECTA   உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us