Versions
TOV அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.
IRVTA அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, சேனைகளின் யெகோவாவை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று அழிக்கப்பட்ட பட்டணம் என்னப்படும்.
ERVTA அப்பொழுது, எகிப்தில் ஐந்து நகரங்கள் இருக்கும். அங்குள்ள ஜனங்கள் கானான் மொழியைப் (யூதமொழி) பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நகரங்களுள் ஒன்று ‘அழிவின் நகரம்’ என்று பெயர் பெறும். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றுவதாக ஜனங்கள் வாக்களிப்பார்கள்.
RCTA அந்நாளில் கானான் நாட்டின் மொழியைப் பேசும் நகரங்கள் எகிப்து நாட்டில் ஐந்து இருக்கும்; அவை சேனைகளின் ஆண்டவர் பேரால் ஆணையிடும்; அவற்றுள் ஒன்று சூரியபட்டணம் எனச் சொல்லப்படும்.
ECTA அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று "கதிரவன் நகரம்" என்று அழைக்கப்படும்.