Bible Versions
Bible Books

Isaiah 23:8 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
IRVTA   கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
ERVTA   தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப் போன்றிருக்கின்றனர். அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள். எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?
RCTA   மணிமுடிகளை மன்னர்களுக்கு வழங்கி வந்ததும், இளவரசர் போன்ற வணிகர்களைக் கொண்டிருந்ததும், உலகத்தில் மதிப்பு வாய்ந்த வியாபாரிகளைப் பெற்றிருந்ததுமான தீர் நகருக்கெதிராக இதைத் திட்டமிட்டவர் யார்?
ECTA   அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us