Versions
TOV யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்து போட்டான்.
IRVTA யெகுதி மூன்று நான்கு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருள் எல்லாவற்றையும் நெருப்பில் வெந்துபோக, அடுப்பிலிருந்த நெருப்பில் எறிந்துவிட்டான்.
ERVTA யெகுதி புத்தகச் சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் அரசனான யோயாக்கீம் புத்தகச் சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச் சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச் சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று.
RCTA யூதி ஓலைச்சுருளில் மூன்று அல்லது நான்கு பத்திகளை வாசிக்க வாசிக்க, அரசன் தன் சூரிக் கத்தியால் அதை அறுத்து அறுத்துக் கணப்பு நெருப்பில் போட்டுக் கொண்டே வந்தான்; ஓலைச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை இவ்வாறு செய்தான்.
ECTA எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து கனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.