Bible Versions
Bible Books

Numbers 1:50 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
IRVTA   லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
ERVTA   லேவியர்களிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
RCTA   அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.
ECTA   லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us