Bible Versions
Bible Books

1 Kings 10:21 (NCV) New Century Version

Versions

TOV   ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
IRVTA   ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.
ERVTA   அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. "லீபனோனின் காடு" எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
RCTA   சாலமோன் அரசருக்கு இருந்த பான பாத்திரங்கள் எல்லாம் பொன்னாலும், லீபானின் வனம் என்ற மாளிகையின் தட்டுமுட்டுப் பொருட்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் செய்யப்பட்டிருந்தன. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை. சாலமோனின் காலத்தில் வெள்ளி விலையுயர்ந்த ஒரு பொருளாய் எண்ணப்படவுமில்லை.
ECTA   சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் "லெபனோனின் வனம்" எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை; சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us