Versions
TOV ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
IRVTA ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
ERVTA "என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், "உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்" என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைபடுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன்.
RCTA ஆகையால் 'உனக்குப்பின், உன் அரியணையில் நாம் அமர்த்தும் உன் மகனே நமது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான்' என்று ஆண்டவர் என் தந்தை தாவீதுக்குச் சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஆலயம் எழுப்ப எண்ணியுள்ளளேன்.
ECTA ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்' என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன்.