Versions
TOV சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
IRVTA ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
ERVTA அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான்.
RCTA மக்கள் இவ்வாறு அவருக்கு எதிராகக் கத்துவதன் காரணத்தைப் படைத்தலைவன் அறிய விரும்பி, அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோய்ச் சாட்டைகளால் அடித்து விசாரிக்க கட்டளையிட்டான்.
ECTA மக்கள் இவ்வாறு கூச்சலிடுவதின் காரணத்தை ஆயிரத்தவர் தலைவர் அறிய விரும்பி அவரைக் கோட்டைக்குள் அழைத்துச் சாட்டைகளால் அடித்து விசாரணை செய்ய ஆணை பிறப்பித்தார்.