Bible Versions
Bible Books

Daniel 6:15 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.
IRVTA   அப்பொழுது அந்த மனிதர்கள் ராஜாவினிடத்தில் கூட்டமாக வந்து: ராஜா கட்டளையிட்ட எந்த உத்திரவும் கட்டளையும் மாற்றப்படமுடியாது என்பது மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.
ERVTA   பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், "அரசே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, அரசனால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது" என்றார்கள்.
RCTA   ஆனால் அந்த மனிதர்கள் அரசனின் எண்ணத்தை அறிந்து கொண்டு, வஞ்சகமாய் வந்து அவனை நோக்கி, "அரசன் ஏற்படுத்திய கட்டளையை மாற்ற முடியாது என்பது மேதியர், பேர்சியர்களின் சட்டம்; அரசே, அதை உமக்கு நினைவூட்டிக் கொள்ளுகிறோம்" என்றனர்.
ECTA   ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, "அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us