Versions
TOV வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
IRVTA வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு,
தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்;
மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி
தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார்.
ERVTA வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.
RCTA (15) வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது.
ECTA வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது; "அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்".