Bible Versions
Bible Books

Ezekiel 24:13 (NCV) New Century Version

Versions

TOV   உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
IRVTA   உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
ERVTA   நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய். அதனால் பாவக்கறையோடு உள்ளாய். நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன். ஆனால் அழுக்கு வெளியேறவில்லை. எனது கோபநெருப்பு தணியும்வரை நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!
RCTA   உன்னுடைய அருவருப்பான வேசிச்ததனமே அந்தத் துரு. நாம் உன்னைச் சுத்தப்படுத்த விரும்பியும், நீ உன்னுடைய அசுத்தத்திலிருந்து சுத்தமாகவில்லை; ஆகையால் நமது ஆத்திரம் உன் மேல் கொட்டித் தீருமட்டும் நீ சுத்தமாகவே மாட்டாய்.
ECTA   உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் தூய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us