Versions
TOV இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
IRVTA இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து,
ERVTA இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப் போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப் போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும்.
RCTA இஸ்ராயேலின் ஒளியானவர் நெருப்பாவார்; அதனுடைய பரிசுத்தர் தீக்கொழுந்தாய் இருப்பார்; அவனுடைய முட்களையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டுத் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்.
ECTA இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்; அதன் தூயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்; அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும்.